×

ஆவின் ஸ்வீட் எடு…கொண்டாடு!: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது ஆவின் நிறுவனம்..!!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசும் பலகாரமும்தான். அதுவும் தரமான பலகாரங்களை சாப்பிட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். பல இனிப்பு கடைகள் பலகார சீட்டுகளை பிடித்து மக்களுக்கு இனிப்பு, காரங்களை வழங்குவார்கள். கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் சார்பில், இந்த தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்வதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, தீபாவளி பண்டிகை தள்ளுபடி விலையில் இனிப்புகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. அதன்படி, ரூ.300, ரூ.500, ரூ.900 ஆகிய 3 விலைகளில் தள்ளுபடி முறையில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது.

மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், பிஸ்கட் 80 கிராம் உள்ளிட்டவை ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 200 கிராம் உள்ளிட்டவை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மொத்த ஆர்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. சுத்தமான ஆவின் நெய்யால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்பட உள்ள இந்த இனிப்பு வகைகள் தரத்தில் உயர்ந்தவை ஆகும்.

The post ஆவின் ஸ்வீட் எடு…கொண்டாடு!: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது ஆவின் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Avin Sweet ,Avin ,Diwali ,Chennai ,Diwali festival ,Avin Sweets ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல்?: ஆவின் மறுப்பு